ஜெ., மருத்துவமனை வீடியோக்கள் நிறைய இருக்கு.. பகீர் கிளப்பும் வெற்றிவேல்
சென்னை, செப்-19
வடசென்னை தெற்கு மாவட்ட அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் யானைகவுனியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான வெற்றிவேல் பேசும் போது, தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டத்தை கொண்டு வரும் நோக்கத்தோடு தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின், மகனை வெற்றி பெற செய்தார்கள். ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற ஒரு யுத்தத்தை தொடங்கினார்.
ஆனால் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் என்னிடம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த வீடியோ ஆதாரங்கள் இருப்பது ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரியவில்லை.இன்னும் ஜெயலலிதா சாப்பிடுகின்ற ஏராளமான வீடியோக்கள் என்னிடம் உள்ளது. அதை தேவைப்படும் நேரத்தில் வெளியிடுவேன் என்று பேசியுள்ளார்.
வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டு இயந்திரம் முற்றிலுமாக நீக்கப்பட்டு ஓட்டுச்சீட்டு முறைதான் வரும். இதை எதிர்க்க தைரியமும் தெம்பும் சசிகலாவுக்கும், டி.டி.வி தினகரனுக்கும் மட்டும்தான் உண்டு வேறு யாருக்கும் இல்லை என்று உறுதியாக சொல்லுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ மற்றும் ஆடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எந்த வீடியோ வெளிய வரப் போகிறது என்ற அச்சம் அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.