வேற லெவல், செம, Rajinified, பெஸ்ட்: தர்பார் ட்விட்டர் விமர்சனம்

சென்னை, ஜனவரி-09

தர்பார் படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் நல்லவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்த தர்பார் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று ரிலீஸாகியுள்ளது. முதல்நாள் முதல் காட்சியை பார்க்க ரஜினி ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்துவிட்டனர். அதிகாலை காட்சியை ரசிகர்களுடன் பார்க்க ரஜினி குடும்பத்தாரும் தியேட்டருக்கு வந்தனர்.

ஒவ்வொரு தலைவர் ரசிகரும் பல ஆண்டுகளாக காத்திருந்த படம் தான் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் ஜெயித்துவிட்டார். தலைவர் சும்மா கிழிச்சு இருக்காரு. அருமையான படம். தர்பார் படத்தின் முதல் பாதி தீயாக உள்ளது. ரஜினி படு சுறுசுறுப்பாக இருக்கிறார்.

அனிருத் இசை சிறப்பு. இதுக்குமேல கெத்தா எவராலும் பிஜிஎம் போட முடியாது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு அருமை. செமயான திரைக்கதை. என்ன ஹீரோயினுக்கு வேலை இல்லாதது தான் ஒரே மைனஸ். என்ன ஒரு முதல் பாதி… பெர்ஃபெக்ட். அனைத்து சீன்களும் தீயாக உள்ளது.

ரஜினி மிகவும் இளமையாக தெரிகிறார். ரஜினி, நயன்தாரா காதல் காட்சிகள் நன்றாக உள்ளது. சிவாஜிக்கு பிறகு ரஜினிகாந்துக்கு சிறந்த கமர்ஷியல் படம். முருகதாஸ் இஸ் பேக். சிவாஜிக்கு பிறகு தலைவர் படத்தில் தர்பாரில் தான் முதல் பாதி சிறப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *