முதலீடுகளை மேம்படுத்த முதல்வர் தலைமையில் உயர்நிலை அதிகாரக்குழு

தமிழகத்தில் முதலீடுகளை மேம்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை, செப்-19

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முதலீடுகளை மேம்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில்துறை முதன்மைச் செயலாளர் குழுவின் உறுப்பினர் செயலராக செயல்படுவார். ஒரு மாதத்திற்கு மேலாக நிலுவையில் உள்ள அனுமதிகளுக்கு இக்குழு தீர்வு காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் முதலீட்டாளர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி நிலையில் சிறப்பு அலுவலரை கொண்டு முதலீடுகளை எளிதாக்கும் பிரிவு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *