வெளியானது தர்பார், கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!!!

சென்னை, ஜனவரி-09

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகிய தர்பார் திரைப்படம் வெளியானது

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் தர்பார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இந்த படத்தின் மோஷன் பிக்சர், ட்ரெய்லர் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல், மற்ற டீசர்கள், ட்ரெய்லர்கள் படைக்காத சாதனைகளை தர்பார் சமூக வலைதளத்தில் படைத்தது.  இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தர்பார் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இரவில் இருந்தே தியேட்டர் வாசல்களில் காத்திருந்த ரஜினி ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர்.

சென்னையில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் தர்பார் வெளியிடப்பட்டது. படம் வெளியானதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் ரஜினிக்கு பெரிய பெரிய கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர். தர்பார் படத்தையும் பார்த்து ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *