வசனமே இல்லாம, இளையராஜாவின் பி.ஜி.எம்.லேயே மிரட்டும் மிஷ்கினின் சைக்கோ ட்ரெய்லர்!!!

சென்னை, ஜனவரி-08

மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் நடித்துள்ள சைக்கோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

புது புது படைப்புகளை தருவது இயக்குநர் மிஷ்கினுக்கு கைவந்த கலை. அந்த வகையில் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வருகிறது சைக்கோ படம். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசருக்கே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சைக்கோ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார். இந்த படம் வருகிற 24-ம் தேதி திரைக்கு வருகிறது.

டீசரை போலவே டிரெய்லரிலும் வசனங்கள் எதுவும் இல்லை. இளையராஜாவின் பி.ஜி.எம். மட்டுமே டிரெய்லர் முழுக்க நிறைந்து காட்சிக்கு காட்சி மிரட்டுகிறது. பார்வை தெரியாத நாயகன் உதயநிதி ஸ்டாலின் எப்படி படுமோசமான சைக்கோ வில்லனிடம் இருந்து தனது காதலியான அதிதி ராவை காப்பாற்றுகிறார் என்கிற கதையை அடிப்படையாகக் கொண்டு சைக்கோ உருவாகியுள்ளது என்பது டிரெய்லரை வைத்து கணிக்க முடிகிறது.

சைக்கோ ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், #PsychoTrailer என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மிஷ்கின் இயக்கத்தையும், இளையராஜாவின் இசையையும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிதி ராவின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *