யாருக்கும் அஞ்சாத அரசு அதிமுக அரசு-முதலமைச்சர் பழனிசாமி

சென்னை, ஜனவரி-08

யாருக்கும் அஞ்சும் அரசு, ஆளும் அதிமுக அரசு அல்ல என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உறுதிபடக் கூறியிருக்கிறார்.

சட்டப்பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல பேசினால், தங்கள் உறுப்பினர்களும் எழுந்து நின்று பேசுவார்கள், குறுக்கிடுவார்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் எப்படி பேச வேண்டும் என எதிர்கட்சித் துணைத் தலைவர் உத்தரவு போட முடியாது

தங்களை அதிகாரம் செய்ய நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது என்றும், யாருக்கும் அஞ்சும் அரசு, ஆளும் அதிமுக அரசல்ல என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உறுதிபடக் கூறினார்.

மிக முக்கியமான பிரச்சனைக்கு தெளிவான விளக்கம் அளிக்கவே அமைச்சர்கள் பேசுகிறார்கள் என்றும், வன்முறை நடக்கிறது, துப்பாக்கி சூடு நடக்கிறது என, எதிர்க்கட்சியினர் பேசுவது சரியா என்றும் முதலமைச்சர் வினவினார். தமிழ்நாட்டில் எங்கும் நடக்காத விஷயத்தை எதிர்க்கட்சிகள் பேசும்போது தான், அதற்கு அமைச்சர் விளக்கம் அளித்தார் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *