பேரவையில் 3 சட்ட மசோதாக்கள் தாக்கல்!!!

சென்னை, ஜனவரி-08

தமிழக சட்டப்பேரவையில் மூன்று சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் 2020ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மூன்றாம் நாளான இன்று சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை எம்.எல்.ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தொடரில் பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் எதிர்க்கட்சி தலைவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினர்

மேலும், இன்றைய கூட்டத்தொடரில், மூன்று சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 2020 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜு தாக்கல் செய்தார். 2020 ஆம் ஆண்டு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.

வேளாண் விளைபொருள் மற்றும் சந்தைப்படுத்துதல், ஒழுங்குமுறைப்படுத்துதல் தொடர்பான சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் துரைக்கண்ணு தாக்கல் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *