ஒரே பந்தில் 9 ரன்கள் எடுத்தவர் முதல்வர் பழனிசாமி-அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை, ஜனவரி-08

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றையை கூட்டத்தொடரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்:  ஒரே பந்தில் 9 ரன் எடுத்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதாவது தமிழகத்தில் ஒரே நேரத்தில் 9 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி பெற்றுத் தந்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் நீட் தேர்வு வேண்டாம் என்று அரசு நிறைவேற்றிய இரண்டு தீர்மானங்களின் நிலை என்ன? நீட் விலக்கு கோரி அரசு தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு வந்துள்ளதா? இந்த ஆண்டு நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க காலக்கெடு நிறைவு பெற்றுள்ளதை சுட்டிக் காட்டினார்.

நீட் தேர்வால் சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் துரோகம் இழைக்கப்பட்டு விட்டது என்று கூறினார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வை எதிர்ப்பதில் அதிமுக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *