அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்-பரபரப்பு வீடியோ

பாக்தாத், ஜனவரி-08

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. அதற்கான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் ராணுவ தளபதி காசிம் சுலைமாணி அமெரிக்கா ராணுவ படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதில் இருந்து ஈராக்கிற்கும், அமெரிக்காவுக்கும் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க அல் ஆசாத் மற்றும் இர்பில் விமானப்படை தளங்கள் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

பத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும் தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *