பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை, ஜனவரி-07

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுதும் 29,213 பேருந்துகள் இயக்கவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் மற்றும் பிற மண்டல அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுதும் 29,213 பேருந்துகள் இயக்கவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எம்ஜிஆர் பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி நகராட்சி பேருந்து நிலையம், கேகே நகர் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்து 12, 13, 14   ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தினசரி வழக்கமாக இயக்கப்படும் 2225 பேருந்துகளுடன் 4950  சிறப்பு பேருந்துகள் உடன் மொத்த  சென்னையிலிருந்து 16075 பேருந்துகள் இயக்கப்படும் என்றார். பிற ஊர்களில் இருந்து 9,995 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேற்கண்ட நாட்களில் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து சேலம், மதுரை திருச்சி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் முறையே 1974 மற்றும் 1474 பேருந்துகள் இயக்கப்படும்.

பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர் திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு 602 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

வழித்தட மாற்றம்:

முன்பதிவு செய்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி நசரத்பேட்டை, அவுட்டர் ரிங் ரோடு வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகள் ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது

முன்பதிவு சிறப்பு மையங்கள்:

கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம்- 15, தாம்பரம் சானிடோரியம்- 1, பூந்தமல்லி பேருந்து நிலையம் -1, பூந்தமல்லி மற்றும் Mepz முன்பதிவு மையங்கள் ஒன்பதாம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்

பொங்கல் பண்டிகைக்கு பின் பிற ஊர்களில் இருந்து 16ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகை முடிந்து ஏனைய பிற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 9370 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பொங்கலுக்கு பின்பு சேலம், மதுரை, திருச்சி தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் இருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூருக்கு சிறப்பு பேருந்துகள் முறையே 1200 மற்றும் 1525 பேருந்துகள் இயக்கப்படும.

பொங்கல் பண்டிகைக்கு பின்பு சேலம் திருவண்ணாமலை வேலூர், சென்னை, கரூர் திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் இருந்து பெங்களூருக்கு 376 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்பேருந்து இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாக 9445014450, 9445014436 வழங்கப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பேருந்து அதிக கட்டணம் வசூலித்தால் – 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம்.

சிறப்பு பேருந்து நிலையம் விவரம்:

1) மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

2) கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து இசிஆர் வழியாக புதுச்சேரி கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

3) தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக விக்ரவாண்டி பண்ருட்டி செல்லக்கூடிய பேருந்துகள்

 4) தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர் சேத்துப்பட்டு வந்தவாசி செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி நெய்வேலி வடலூர் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி கடலூர் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

5) பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர் ஆரணி ஆற்காடு திருப்பத்தூர் காஞ்சிபுரம் செய்யாறு ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்

6) கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்குறிப்பிடப்பட்ட ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *