நிர்பயா பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜன.22-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற அதிரடி உத்தரவு

டெல்லி, ஜனவரி-07

நிர்பயா பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜன.22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் நிகழ்ந்த இந்த வன்கொடுமையை கேட்டு ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியில் உறைந்தது.

இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி, அந்த பேருந்து ஓட்டுநர் ராம் சிங், அவருடைய சகோதரர் முகேஷ், வினய் ஷர்மா, பவன் குப்தா ஆகிய நான்கு பேரையும் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில், அக்ஷய் தாக்கூர் மற்றும் ஒரு சிறுவனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

2013 ஜனவரி 2 ஆம் தேதி டெல்லி விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையிலான அமர்வு முன் வழக்கின் விசாரணை தொடங்கியது.  வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ராம் சிங் திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். ஆகஸ்ட் 31 ஆம் தேதி நிர்பயா வழக்கில் தொடர்புடைய சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். 

நிர்பயா வன்கொடுமை தொடர்புடைய மீதமுள்ள முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

எனினும், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 4 பேரும் டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். ஆனால், தொடர்ந்து அவர்களின் மேல்முறையீடு மற்றும் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.  

இந்த நிலையில், தூக்கு தண்டனையை விரைந்து நிறைவேற்றக்கோரி நிர்பயாவின் தாய் ஆயிஷா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றவேண்டும் என உத்தரவிட்டனர். ஜன.22 ஆம் தேதி காலை 7 மணிக்கு 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *