அமித்ஷாவை முதல்முறையாக சந்தித்த மம்தா பானர்ஜி

டெல்லி, செப்-19

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மேற்கு வங்க மாநிலத்தை பங்களா என பெயர் மாற்றம் செய்வது தொடர்பான கோரிக்கையை முன்வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று பிரதமர் மோடியை சந்தித்தபோதும், இதே கோரிக்கையை மம்தா முன்வைத்தார்.

அரசியலில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. இரண்டு கட்சி தலைவர்களும் ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, அசாமில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட 19 லட்சம் பேரையும் குடிமக்கள் பதிவேட்டில் இணைக்கப்பட வேண்டும் என்றார். இதனை அமித் ஷாவிடம் வலியுறுத்தியதாகவும், இது தொடர்பாக அமித் ஷாவிடம் கடிதத்தைக் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விடுபட்ட 19 லட்சம் பேரில் இந்தி, வங்க மொழி, அசாம் மொழி பேசுபவர்கள் அதிகம் உள்ளதாகவும், உண்மையான வாக்காளர்கள் நிறைய பேர் விடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேற்கு வங்கத்துக்கு தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையில்லை என்பதே நிரந்தர நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *