தமிழகத்தில் குடிநீர் வினியோகம் சீராக உள்ளது : சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை, ஜன. 7

தமிழகத்தில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருவதாக  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது விருத்தாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் கீழ்காலனி பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்றார்.

 இதற்கு பதிலளித்துப் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அப்பகுதியில் புதிய குடியிருப்பு, பழைய குடியிருப்பு என பகுதிகள் உள்ளன. அங்கு மின்விசை பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தினசரி குடிநீர் வினியோகம் சீராக நடைபெற்று வருகிறது. அங்கு ரூ.8.5 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு சிரான முறையில் குடிநீர் வினியோகம் வழங்கப்படும். மேலும் அப்பகுதியில் துறை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்யப்படும் என்றார்.

மேலும் தமிழகத்தில் நகராட்சி நிர்வாக துறை, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் சீரான குடிநீர் குழாய் மூலம் வினியோகிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் வேலுமணி குறிப்பிட்டார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *