ரஜினியின் தர்பார் படத்தை மலேஷியாவில் வெளியிட தடை!!!

சென்னை, ஜனவரி-07

ரூ.4.49 கோடியை வழங்கும் வரை மலேசியாவில் தர்பார் படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்த படம் உலகமெங்கும், வருகிற ஜனவரி 09 –ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி மலேஷியாவை சேர்ந்த டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படத்திற்காக லைகா நிறுவனத்திற்கு 12 கோடி ரூபாயை கடனாக வழங்கியதாகவும், தற்போது அந்த தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.23 கோடியே 70 லட்சம் செலுத்தவேண்டியிருப்பதால், அந்த பணத்தை தராமல் தர்பார் படத்தை வெளியிடக் கூடாது என தடை கோரப்பட்டது.

இந்த வழக்கில் இரு தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, ரூ.4.49 கோடியை டெபாசிட் செய்யும் வரை தர்பார் படத்தை மலேஷியாவில் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டது. பணத்தை உடனடியாக லைகா நிறுவனம் டெபாசிட் செய்தால் தர்பார் படத்தை வெளியிடலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *