தனுஷ் நடித்துள்ள “பட்டாஸ்” படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

சென்னை, ஜனவரி-07

கொடி திரைப்பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இப்படத்தில் நடிகை சினேகா, தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் மெஹ்ரீன் பிர்சாடா (Mehreen Pirzada) உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் பாடல்கள், அண்மையில் வெளியாகின. பொங்கல் விடுமுறையையொட்டி வரும் ஜனவரி 16-ம் தேதி பட்டாஸ் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 2 நிமிடங்கள் ஓடும் ட்ரெய்லரின் துவக்கத்தில், நமக்கு எது நல்லதுனு நம்ம மண்ணுக்குத் தான் தெரியும், நம்ம மண்ணோட ஈரத்த காயாம காப்பாத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோய் சேர்க்குறது நம்ம கடமை இல்லையா” என தனுஷ் பேசும் வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இப்படத்திற்கு விவேக் – மெர்வின் என்ற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். ட்ரைலரில் இசைக்கப்படும் பிஜிஎம் மிகவும் கவர்ந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *