குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக 68 லட்சம் பேர் மிஸ்டு கால்-அமித்ஷா

டெல்லி, ஜனவரி-06

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து 68 லட்சம் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பாஜக அரசு   கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சட்டத்திற்கு ஆதரவாக பாஜக கூட்டணி கட்சிகள், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றன. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு நாடு தழுவிய அளவில் ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தை பாஜக முடுக்கி விட்டுள்ளது.

அதன் ஒரு அங்கமாக, சட்டத்திற்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு பாஜக நிர்வாகிகள் வீடு விடாக சென்று ஆதரவு அளிக்க கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளிக்க இலவச டோல் பிரீ தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டு, மிஸ்டு கால் செய்யுமாறு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இதன் அடிப்படையில் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 68 லட்சம் பேர் மிஸ்டு கால் செய்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *