சவரனுக்கு ரூ.424 குறைந்தது தங்கம் விலை!!!

சென்னை, ஜனவரி-07

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 424 ரூபாய் குறைந்துள்ளது. 

நேற்று சவரனுக்கு 512 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 31 ஆயிரம் ரூபாயை கடந்து தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 30 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 53 ரூபாய் குறைந்து மூவாயிரத்து 843 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் குறைந்துள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து 51 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *