டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள 176 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு செய்தி

தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள 176 சிவில் நீதிபதிகளுக்கான பணியிடங்களை நேரடி போட்டித் தோ்வின் மூலம் நிரப்பிட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் அறிவிப்பு கடந்த 9ம் தேதியன்று வெளியிடப்பட்டது. தற்போது, இதற்கானத் தேர்வில் பங்கேற்க விரும்பும் இளம் வழக்குரைஞர்கள் மற்றும் சட்ட பட்டதாரிகள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சென்னை, செப்-19

மொத்த காலியிடங்கள் : 176

பணி : சிவில் நீதிபதி

கல்வித் தகுதி : சட்டப் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று இந்திய பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பு சலுகை பெற விரும்புவோர் வழக்குரைஞர் பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி சட்ட பட்டதாரிகள் 27 வயதிற்கு உட்பட்டும், சட்டப்படிப்பை முடித்து பணியாற்றும் வழக்குரைஞர்கள் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். விதவைப் பெண்கள் 40 வயதிற்கு உட்பட்டு இருக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.27,700 முதல் ரூ.44,770 வரையில்

தேர்வு முறை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல்நிலை, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் இடம் : சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம்

முதன்மைத் தேர்வு நடைபெறும் இடம் : சென்னை

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 09.10.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
http://www.tnpsc.gov.in/Notifications/2019_25_CIVIL_JUGDE.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *