ரூ.132 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை, ஜனவரி-06

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் அரியலூர் மாவட்டம், அரியலூரில் 7 கோடியே 35 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் அலுவலகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், 36 கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 50 காவலர் குடியிருப்புகள், 7 காவல் நிலையங்கள், 5 காவல்துறை இதர கட்டடங்கள், 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 55 குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், சுமார் 96 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களையும், உடுமலை சைனிக் இளநிலை மாணவர்கள் விடுதிக் கட்டடத்தையும் முதலமைச்சர் திறந்துவைத்தார்.

டாஸ்மாக் உபரி பணியாளர்கள் 491 பேர், தமிழ்நாடு வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்குவதன் அடையாளமாக, 7 பேருக்கு, பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

வனத்துறையில் காலியாக வனக்காவலர்கள் பணியிடங்களுக்குத் தேர்வான 564 பேருக்கு பணி ஆணைகளை வழங்கும் முகமாக, 7 பேருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 18 நூலகர் மற்றூம் தகவல் உதவியாளர் பணியிடங்களுக்கு டிஎன்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *