பொங்கல் பரிசு தொகுப்பு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

கோவை, ஜனவரி-06

கோவையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தப்படி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள ராமலிங்க சௌடேஸ்வரி கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

விழாவுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமை தாங்கினார். இந்த விழாவில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார். இதில், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *