பிப்-8ந் தேதி டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல், 11ல் வாக்கு எண்ணிக்கை

டெல்லி.ஜனவரி.6

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான  ஆம்  ஆத்மி கட்சியின் ஆட்சி பிப்ரவரி 22ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.  இதனையடுத்து 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கையை தேர்தல்  ஆணையம்  மேற்கொண்டது.

 இந்தநிலையில் இன்று  டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, பிப்ரவரி மாதம் 8 ந் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்றார். ஒரே கட்டமாக  வாக்குப்பதிவு நடத்தப்பட்டு 11ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜனவரி 14ல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் என்று மனுக்களை திரும்பப்பெற ஜனவரி 21 கடைசி நாள் என்று டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.

தேர்தலில்  வாக்களிக்க 1,46,92,136 பேர் தகுதிப்பெற்றுள்ளனர் என்றும் இதில் ஆண் வாக்காளர்கள் 80.55  லட்சம் என்றும் பெண் வாக்காளர்கள் 66.35 பேர் உள்ளதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *