பாதுகாப்பு வீரர்களை கத்தியால் மிரட்டும் கஞ்சா விற்கும் நபர்-வைரலாகும் வீடியோ

நெய்வேலி, ஜனவரி-06

நெய்வேலி என்எல்சியின் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரை கத்தியால் கஞ்சா மணி மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நெய்வேலி என்எல்சியின் இரண்டாம் நிலக்கரி சுரங்கத்தில் மத்திய தொழிலாக பாதுகாப்பு படை வீரராக செல்வேந்திரன் பணியாற்றி வருகிறார்.

நேற்று செல்வேந்திரன் பணியில் ஈடுபடிருந்தபோது அங்கு வந்த மந்தாரக்குப்பம் ஒம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த மணி (எ) கஞ்சா மணி சுரங்கப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து காப்பர் கம்பிகளை வெட்டி எடுத்துக்கொண்டு சென்றுள்ளான். இதனையறித்த செல்வேந்திரன் கஞ்சா மணியை தடுத்து நிறுத்த முயற்சித்து விரட்டிச் சென்றுள்ளார்.

அப்போது அவன் தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து பாதுகாப்பு படை வீரர் செல்வேந்திரனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்த செல்வேந்திரனை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட மந்தாரக்குப்பம் காவல் ஆய்வாளர் மினாள் தலைமையிலான போலீசார் கஞ்சா மணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கிழ் கைது செய்தனர்.

இந்த நிலையில், மூன்று மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்த கஞ்சா மணி பாதுகாப்பு படை வரை கத்தியை கொண்டு மிரட்டுவதும், முட்டி போட வைத்து அடிப்பது போல வீடியோ சமூகத்தில் வைரலாகி வருகிறது. இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *