இதுக்கு மட்டும் நேரம் இருக்கா? நடிகை நயன்தாராவை விளாசிய ரஜினி, விஜய் ரசிகர்கள்!!!

சென்னை, ஜனவரி-06

நயன்தாரா புதுப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே ப்ரொமோஷன் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் வர மாட்டேன் என்று கறாராக கூறி விடுவார் என கூறப்படுகிறது. பிரமாண்டமாக நடந்த பிகில் மற்றும் தர்பார் இசை வெளியீட்டு விழாக்களுக்கு கூட நயன்தாரா வரவில்லை.

இந்நிலையில் அவர் தனியார் தொலைக்காட்சி நடத்திய விருது விழாவில் கலந்து கொண்டார். இதை பார்த்த விஜய், ரஜினி ரசிகர்கள் கடுப்பாகி நயன்தாராவை சமூக வலைதளங்களில் விளாசியுள்ளனர்.

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நயன்தாரா கலந்து கொள்ளாவிட்டாலும் அவரை புகழ்ந்து பேசினார் ரஜினிகாந்த். இந்நிலையில் தர்பார் விழாவுக்கு வர முடியவில்லையாம், விருது விழாவுக்கு மட்டும் போக முடியுதோ என்று ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பிகில் விழாவுக்கு ஏன் வரவில்லை என்று விஜய் ரசிகர்களும் குமுறியுள்ளனர்.

படங்களில் நடிப்பதால் தான் விருது கிடைக்கிறது. அப்படி இருக்கும்போது பட விழாக்களுக்கு போகாமல் விருது விழாவுக்கு மட்டும் கரெக்டா போகிறீர்களே. தயாரிப்பாளர்களின் வயித்தெரிச்சல் உங்களை சும்மாவிடாது என்கிறார்கள் நெட்டிசன்கள்.

நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே எல்லாத்தையும் சொல்லிட்டுத் தானே நடிக்கிறார். அப்படி இருக்கும்போது தற்போது அவரை விளாசுவது சரியில்லை என்று நயன் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பிகில் படத்தில் நீங்கள் நடித்தீர்களா, சொல்லவே இல்லை. உங்களுக்கு எதற்காக பிகிலுக்கு விருது என்று விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ரஜினி ரசிகர்களோ தர்பார் விழாவை நயன்தாரா புறக்கணித்த கடுப்பை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *