வெள்ளை மாளிகையை தகர்ப்போம்: அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை

 

தெஃரான். ஜனவரி.6

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை  தகர்க்க கூடிய  வலிமை உள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளது.

பாக்தாதில் உள்ள விமான நிலையம் அருகே அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவத்தால், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் போா் ஊருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், ஈரான் அதிபர் பேசுகையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது எங்களால் தாக்குதல் நடத்த முடியும். அதற்கான சக்தி எங்களிடம் உள்ளது, சரியான நேரத்துக்காக காத்திருக்கிறோம். போர் அறிவிக்கப்பட்டால் அது அமெரிக்காவுக்கு தான் தோல்வியாக அமையும் என்று எச்சரித்துள்ளார்.

இதனிடைய  ஈரான் தொலைக்காட்சியில், மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு 80 மில்லியின் அமெரிக்க டாலர்கள் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மீது ஈரான் போர் தொடுக்க நினைத்தால், அங்கு அடைத்துவைக்கப்பட்ட பிணைக் கைதிகளை குறிக்கும் வகையில் ஈரானுக்கு சொந்தமான 52 இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஈரானின் புரட்சிகர ராணுவ தளபதியாக, குவாசிம் சுலைமானிக்கு அடுத்த நிலையில் இருந்த இஸ்மெயில் கானி  பொறுப்பேற்றுள்ளார். குவாசிம் சுலைமானி அமெரிக்கா வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டது குறித்து பேசிய இஸ்மெயில் கானி, “சுலைமானி  கொல்லப்பட்டதற்கு பழி தீர்ப்போம் என்று கூறியுள்ளார். இதனால் இருநாடுகளுக்கு இடையே எந்நேரமும் போர் மூளும் சூழல் உருவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *