ஜன.09-ம் தேதிவரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்

சென்னை, ஜனவரி-06

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜன.09-ம் தேதிவரை நடத்துவதாக அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

2020 ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல அம்சங்களுடன் கூடிய உரையை வாசித்தார். ஒரு மணிநேரம் ஆளுநர் உரையானது பேரவையில் வாசிக்கப்பட்டது. இதன்பிறகு சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து சபாநாயகர் தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பினர் கலந்துகொண்டனர்.

அப்போது சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜன.09-ம் தேதிவரை நடத்துவதாக அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி-10 (வெள்ளிக்கிழமை) வரை கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே நிறைவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *