சவரனுக்கு ரூ.31 ஆயிரத்தை தாண்டிய தங்க விலை!!!

சென்னை, ஜனவரி-06

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 31,000 ரூபாயைத் தாண்டி, வரலாறு காணாத விலை உயர்வை எட்டியுள்ளது.

சர்வதேசச் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டின் இறுதியில் தங்கம் விலையில் உயர்வு இருந்த நிலையில் புத்தாண்டு தொடங்கியதில் இருந்தும் ஒவ்வொரு நாளும் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 31,000 ரூபாயைத் தாண்டி வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 64 ரூபாய் உயர்ந்து 3,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 5 நாட்களாக தங்கம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

நேற்று, 30,656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 31,168 ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு 512 ரூபாய் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *