ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு!!!

சென்னை, ஜனவரி-06

ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று (ஜன.6) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 15-வது சட்டப்பேரவையின் 8-வது கூட்டம் மற்றும் வரும் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

அப்போது, புத்தாண்டு வாழ்த்துகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையைத் தொடங்கினார். உடனேயே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று பேசினார். அப்போது, ஆளுநர், “என்னை பேச அனுமதிக்க வேண்டும். நான் புதியவர் அல்ல. இரண்டு ஆண்டு காலமாக இங்கு இருக்கிறேன். எனக்கு எல்லாம் தெரியும். நீங்கள் நல்ல பேச்சாளர். நீங்கள் பிறகு விவாதிக்கலாம்” என ஸ்டாலினை நோக்கி கூறினார்.

இதையடுத்து, ஆளுநர் உரையை புறக்கணித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *