முன்னாள் சபாநாயகர் பி.ஹெச் பாண்டியன் மறைவு: ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை, ஜனவரி-04

அதிமுக முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் 1945-ம் ஆண்டு பி.ஹெச்.பாண்டியன் பிறந்தார். வழக்கறிஞராக பணியாற்றிய பி.ஹெச். பாண்டியன் அதிமுக இணைந்து சட்டமன்ற உறுப்பினர், எம்.பி., துணை சபாநாயகர், சட்டப்பேரவை சபாநாயகர் என பல பொறுப்புகளை வகித்தவர். அதுமட்டுமில்லாமல், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர்.

இவரின் மறைவுக்கு அதிமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பி.ஹெச். பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை அண்ணா நகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பி.ஹெச். பாண்டியன் குடும்பத்தினருக்கும் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *