கோவை விழா: குறிச்சி குளத்தில் நவீன பாய்மரக் கப்பல்கள், பார்த்து ரசித்த பொதுமக்கள்

கோவை, ஜனவரி-04

கோவை விழாவை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நவீன பாய் மரக் கப்பல்கள் விடப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்த்து சென்றனர்

கோவை மாவட்டம் உருவான தினத்தை கொண்டாடும் வகையில் கோவை விழா கொண்டாடப்படுகிறது. 12-வது கோவை விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்திய கப்பற்படை மற்றும் தனியார் அமைப்பு இணைந்து கோவை குறிச்சி குளதில் சர்வதேச பந்தயங்களில் கலந்துகொள்ளும் பாய்மரக் கப்பல்கள் விடப்பட்டது. இந்த விழாவில் ஐ.என்.எஸ் அக்ரானி கோவை பிரிவின் கப்பற்படை அதிகாரி அசோக் ராய் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

குளத்தில் எண்டர்பிரஸ், லேசர், ஆப்டிமிக்ஸ், விண்ட் சர்ப்வ், கையாக்கீஸ் போன்ற பாய்மரக் கப்பல்களை பயிற்சி பெற்ற வீரர்கள் இயக்கினர். வீரர்கள் கப்பல் இயக்கும் சாகச நிகழ்ச்சிகளை மக்களும், அதிகாரிகளும் கண்டு ரசித்தனர். இந்திய கடற்படை, சர்வதேச படகு போட்டி மற்றும் குளம் பாதுகாப்பு குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். சர்வதேச பாய்மரக் கப்பல்கள் விடப்பட்டதை ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *