உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.க. எத்தனை இடங்களில் வெற்றி???

சென்னை, ஜனவரி-04

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவில் அதிமுகவும், திமுகவும் சரிக்கு சமமாக தங்கள் பலத்தை நிரூபித்துள்ளன. இரு கட்சிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த கூட்டணி இந்த தேர்தலில் தொடர்ந்தது.

அதிமுக தலைமையில் போட்டியிட்ட பா.ஜ.க. 6 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும், 84 ஒன்றிய கவுன்சிலர் இடங்களையும் வென்றுள்ளது. அதிமுக தலைமையில் 81 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், 6 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை தன்வசமாக்கியுள்ளது பா.ஜ.க.

பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது, அனைத்து இடங்களிலும் தோல்வியடையும் என விமர்சனங்கள் இருந்தாலும், பா.ஜ.க. அதனை மீறி வென்று காட்டியுள்ளது.

பா.ஜ.க. வென்றுள்ள மாவட்ட கவுன்சிலர் இடங்கள்:

கன்னியாகுமரியில் 2 இடங்களையும், கோவை, தேனி, நாகை, ராமநாதபுரத்தில் தலா 1 இடங்களையும் பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.

பா.ஜ.க. வென்றுள்ள ஒன்றிய கவுன்சிலர் இடங்கள்:

கன்னியாகுமரியில் 31 இடங்களையும், நாகையில், 6 இடங்களையும், தஞ்சாவூரில் 7 இடங்களையும், நீலகிரியில் 4 இடங்களையும், கோவை, கரூர், ராமநாதபுரம், திருப்பூர், திருவாரூர், தூத்துக்குடியில் தலா 3 இடங்களும், சிவகங்கை, கடலூர், மதுரை, புதுக்கோட்டை, நாமக்கல், திருவள்ளூர் ஆகிய இடங்களில் தலா 2 இடங்களிலும், விருதுநகர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருச்சி, திருவண்ணாமலையில் தலா ஒரு இடங்களும் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *