”கோவை விழா” கோலாகல கொண்டாட்டம்: கோயில் தூய்மைப்பணி, இசை நிகழ்ச்சியுடன் தொடக்கம்

கோவை, ஜனவரி-03

கோவை மாவட்டம் உருவான தினத்தைக் போற்றும் வகையில் கோவை மாநகராட்சி சாா்பில் ஆண்டுதோறும் ‘கோவை விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ‘கோவை விழா’ ஜனவரி 3 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

10 நாட்களுக்கு நடைபெறும் இந்த விழாவில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. 

தொடர்ந்து 12வது ஆண்டாக நடைபெறும்  ‘கோவை விழா’- வின்  தொடக்க நாளான இன்று (ஜனவரி 3) காலை 10 மணிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் மருதமலையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 150 பேர் இன்று மருதமலை கோவில் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் படிக்கட்டுகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய மாணவர்களின் இந்த தூய்மைப்பணி மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

முன்னதாக காலை 9 மணி அளவில் வெறி நாய் கடியால் ஏற்படும் ராபிஸ் நோய்  தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தெருநாய்களுக்கான கருத்தடை முகாம் சீரநாயக்கன் பாளையத்தில் தொடங்கியது. 10 நாட்களுக்கு இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.     

இதில் திரளான மாணவர் மாணவியர் கலந்துகொண்டனர்.  SBOA மெட்ரிக் பள்ளியில் சார்பில்   கோவை எனது பெருமை   உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. Firebird institute Of Research Management சார்பில்   புகைப்பட   போட்டிகள் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்களுக்கு கோவையின் பல்வேறு பகுதிகளில் புகைப்பட போட்டிகள் நடைபெறுகிறது.

 இன்று (ஜனவரி 3)  மாலை 5 மணிக்கு சரவணம்பட்டியில் உள்ள ஃப்ரோஜோன் வணிக வளாகத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், ஐ.என்.எஸ் அக்ராணியின் அஷோக் ராய், விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம், யெங் இந்தியன் அமைப்பின் நிர்வாகிகள் அனுஷா ராமசாமி, பிரவீன்குமார், கோவை விழா தலைவர் சுப்ரஜ் வெங்கட் ஆகியோர் இணைந்து கோவை விழாவின் ‘மை ஸ்டாம்ப்’ போஸ்டரை வெளியிட்டனர். தொடர்ந்து பாடகர்கள் சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இசை கலைஞர்கள் பங்கேற்று பாடிய இசை நிகழ்சியில் திரளான மக்கள் கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து சனிக்கிழமை (ஜனவரி 4) சூலூா் கலை, அறிவியல் கல்லூரியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கொடிசியாவில் எஜூ இண்டெக் என்ற பெயரில் 3 நாட்கள் கல்விக் கண்காட்சித் தொடங்குகிறது. விவேகானந்தா மெட்ரிக். பள்ளி சார்பில் தமிழ்க் கலாசார நிகழ்ச்சிகள் காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

கோவை, குறிச்சி குளத்தில் ‘போட் ஷோ’ என்ற பெயரில் படகுக் கண்காட்சி தொடங்க உள்ளது. இந்தக் கண்காட்சி ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும். அதே அன்று ஃப்ரோஜோன் வணிக வளாகத்தில் வின்டேஜ் காா்கள் மற்றும் பைக் கண்காட்சி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *