தமிழகத்தில் ஜன.6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

சென்னை, ஜனவரி-03

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அனைத்தும் ஜனவரி 6ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்னும் சில இடங்களில் முடிவடையாத காரணத்தால், நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, ஜனவரி 6ம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *