தொடங்கியது ”கோவை விழா”: கண்களை கவரும் எஜூ-டெக் கண்காட்சி!!!

கோவை, ஜனவரி-03

கோவை விழாவையொட்டி மூன்று நாட்கள் நடைபெறும் எஜூ-டெக் கண்காட்சி கோவை கொடிசியா அரங்கத்தில் இன்று தொடங்கியது.

கோவை மாவட்டத்தின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் கோவை விழா என்ற பெயரில் பத்து நாட்கள் கோவை மாநகர் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டிற்கான கோவை விழா இன்று தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கொடிசியா அரங்கத்தில் இன்று எஜூ-டெக் கண்காட்சி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து கொடிசியா தலைவர் ராம மூர்த்தி கூறுகையில்: இந்த கண்காட்சியில் மொத்தம் 75 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கு இந்த கண்காட்சியில் நிறைய அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைவரும் இக்கண்காட்சியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இக்கண்காட்சியின் மூலம் 30 கோடி ரூபாய் வரை வணிகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

வரும் 5ம் தேதி வரை நடக்குக் இக்கண்காட்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து கல்வி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கான உபகரண தயாரிப்பாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *