கோலாகலமாக தொடங்கியது ”கோவை விழா”, குறிச்சி குளத்தில் வண்ண வண்ண படகுகள்!!!

கோவை, ஜனவரி-03

கோவை மாவட்டத்தின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் கோவை விழா இன்று (ஜனவரி 3)-ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூரின் பெருமையை உலகுக்கு பறைசாற்றும்விதமாக ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் `கோயம்புத்தூர் விழா’, இன்று தொடங்கியது. கோவை மாவட்டத்தின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் கோவை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், 12 ஆம் ஆண்டு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரி 12-ம் தேதி வரை ஆட்டம், பாட்டத்துடன் கோவை விழாவானது நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கோவை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

விழா தொடக்கத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படன. அதனை தொடர்ந்து, குறிச்சி குளத்தில் விதவிதமான படகுகள் விடப்பட்டது.

இதைத் தொடா்ந்து அடுதடுத்த தேதிகளில் மாரத்தான், ஆடை அலங்கார அணிவகுப்பு, கோவையின் முக்கிய உணவகங்கள் ஒரே இடத்தில் உணவு பரிமாறும் உணவு திருவிழா, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, பழமை பொருள் மற்றும் புகைப்பட கண்காட்சிகளும் நடத்தப்படவுள்ளன.

மற்றொரு முக்கிய நிகழ்வாக கலை நிகழ்ச்சிகள் ஜனவரி 10. 11 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதைத் தவிர பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களின் சாா்பில் மாநகரில் ஆங்காங்கே கோவை விழா என்ற அடையாளத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *