தமிழகத்தில் 256 வாகன பேட்டரி சார்ஜ் மையங்கள்-மத்திய அரசு

சென்னை, ஜனவரி-03

சுற்றுச்சூழலுக்கு உகந்த, மாசற்ற போக்குவரத்து முறையை ஊக்குவிக்க நாடு முழுவதும் 62 நகரங்களில் 2,636 பேட்டரி வாகன சார்ஜ் மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றில் அதிகமான மாசு ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல், எரிபொருள்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்று வழியாக பெரும்பாலான நகரங்களில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத இந்த மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாகவும், மாசில்லா போக்குவரத்தை கொண்டுவரவும் 62 நகரங்களில் 2,636 பேட்டரி வாகன சார்ஜ் மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதில், தமிழகத்தில் மட்டும் 256 இடங்களில் பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்யும் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. சென்னையில் 141 கோவையில் 25 மதுரையில் 50 வேலூரில் 10 சேலத்தில் 10 ஈரோட்டில்  10 தஞ்சாவூரில் 10 என மொத்தமாக தமிழகத்தில் 256 இடங்களில் பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்யும் நிலையங்கள் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக என மத்திய அரசு தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *