CAA விவகாரத்தில் ஒரு அங்குலம் கூட அரசு பின்வாங்காது-அமித்ஷா உறுதி

ஜோத்பூர், ஜனவரி-03

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வந்தாலும் மத்திய அரசு ஒரு அங்குலம் கூட பின்வாங்காது என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் திருத்தப்பட்ட குடியுரிமை திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் ஒரு அங்குலம்கூட பின்வாங்கப்போவதில்லை. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வந்தாலும் இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து அரசு பின்வாங்கப் போவதில்லை. எதிர்க்கட்சிகள் விரும்பும் அளவுக்கு தவறான தகவல்களை பரப்பலாம்.

திருத்தப்பட்ட இந்த சட்டம், யாரிடம் இருந்தும் இந்திய குடியுரிமையை பறிக்காது, குடியுரிமையை வழங்குகிறது. ஆனால், தவறான தகவல்களை பரப்புவதன் மூலம், காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியல் செய்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *