ஆதனூர் பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்ற மணிவேல் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

சென்னை, ஜனவரி-03

பெரம்பலூர் அருகே ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்ற மணிவேல் என்பவர் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை 5 மணி அளவில் உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (65). இவருக்கு ஜோதிமணி (65) என்ற மனைவியும், 5 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். உள்ளாட்சி தேர்தலில், ஆதனூர் பஞ்சாயத்து தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டார்.

ஆட்டோ ரிக்சா சின்னத்தில் போட்டியிட்ட அவர், 160 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக 962 ஓட்டுகள் கிடைத்தன. வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் அதிகாரிகளிடம் பெற்றுக் கொண்டார்.

கடந்த சில நாட்களாக சளி, இருமலால் அவதிப்பட்டு வந்த மணிவேலுக்கு இன்று காலை அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. குடும்பத்தினர் மணிவேலை, அரியலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றவர் சான்றிதழ் பெற்ற மறுநாளே இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *