கோவை மாவட்டத்தில் 75% இடங்களை கைப்பற்றியது அதிமுக!!! அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கை மேலும் ஓங்கியது!!!

கோவை, ஜனவரி-03

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு சிங்காநல்லூர் தொகுதியை தவிர மற்ற 9 தொகுதிகளும் அதிமுக வசமே உள்ளன. இந்த மாவட்டத்தில் மொத்தம் 155 ஒன்றிய கவுன்சிலர்களுக்கான இடங்களும், 17 மாவட்ட கவுன்சிலர்களுக்கான இடங்களும் உள்ளன. கடந்த 27 மற்றும் 30 –ம் தேதிகளில் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை எண்ணத் தொடங்கி இன்று காலையுடன் நிறைவடைந்தது.

மொத்தமுள்ள 17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 12 இடங்களையும், திமுக 5 இடங்களையும் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல், மொத்தமுள்ள 155 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அதிமுக கூட்டணி 91 இடங்களை (அதிமுக-84, பா.ஜ.க.-4, தேமுதிக-3) வென்றுள்ளது.  

திமுக கூட்டணி மொத்தம் 56 இடங்களையும் (திமுக-51, காங்.-4, மதிமுக-1) சுயேச்சைகள் 8 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. இதன்மூலம், கோவை மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 75 சதவீதத்திற்கு மேல் அதிமுக கைப்பற்றி உள்ளது.

இதற்கான பெருமை அதிமுக அமைப்பு செயலாளரும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியை சேரும் என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். கோவை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்காக ஓய்வின்றி வீதிவீதியாக வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் கோவை மாவட்ட மக்கள் அதிமுக   பக்கம் இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *