வாங்குனது 10 ஓட்டு: ஆனாலும் ஊராட்சி மன்ற தலைவரான பெண்-தேர்தல் சுவாரசியம்

சென்னை, ஜனவரி-03

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பிச்சிவிளை ஊராட்சி ஊர் மக்கள் தேர்தலை புறக்கணித்ததையடுத்து மொத்தம் பதிவான 13 வாக்குகளில் 10 வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றார்

திருச்செந்தூர் ஊராட்சிக்குட்பட்ட 11 ஊராட்சிகளில் 6 வார்டுகளைக் கொண்டது பிச்சிவிளை ஊராட்சி ஆகும். இங்கு மொத்தமுள்ள 785 வாக்காளர்களில் 6 பேர் மட்டுமே பட்டியல் இனத்தவராவர்.

இச்சூழலில் சுழற்சி அடிப்படையில் தலைவர் பதவியை பட்டியல் இனத்தவர்க்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து தேர்தலைப் புறக்கணித்தனர்.

இதையடுத்து, கடந்த 27-ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் பிச்சிவிளை தலைவர் பதவிக்கு ஏற்கெனவே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த சுந்தராச்சி மற்றும் ராஜேஸ்வரி ஆகியோரும், அவரைச் சார்ந்தவர்கள் என மொத்தம் 6 பேர் மற்றும் ஊர் மக்கள் 7 பேர் என மொத்தம் 13 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில், 2-ம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் பதிவான 13 வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாத வாக்கு ஆகும். மீதமுள்ள 12 வாக்குகளில் 10 வாக்குகள் பெற்று ராஜேஸ்வரி வெற்றி பெற்றார். இதையடுத்து, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ராஜேஸ்வரியிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தோஷ் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *