முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ”சிறந்த அரசியல் ஆளுமை”-க்கான விருது!!!

சென்னை, ஜனவரி-02

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறந்த அரசியல் ஆளுமைக்கான விருதை ஹலோ பண்பலை நிறுவனம் வழங்கி கவுரவித்துள்ளது

முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ஆளுமை விருது தரப்பட்டுள்ளது. பிரபல பண்பலை நிறுவனமான ஹலோ எஃப்.எம். சார்பாக இந்த விருது அளிக்கப்பட்டது. அரசியலில் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து இந்த விருது கொடுக்கப்பட்டது. அரசியல் ஆளுமை விருதை தருவதற்காக ஹலோ எஃப்.எம். நிர்வாக அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் சந்தித்தனர். விருதை முதல்வரிடம் வழங்கிய அந்தக் குழு அவருக்கு வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்தது.

அண்மையில் தான் தமிழக அரசுக்கு மத்திய அரசின் நல்லாட்சி விருது தரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து அனைத்துத் துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் அவருக்கு அடுத்தப்படியாக அரசியல் ஆளுமை விருது கிடைத்திருக்கிறது. இதனிடையே முதல்வரை சந்தித்த அமைச்சர்கள் அரசியல் ஆளுமை விருது பெற்றதற்காக அவரிடம் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *