ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முன்னிலை நிலவரம்!!!

சென்னை, ஜனவரி-02

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணும் பணியானது நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மதியம் 1 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 515 மாவட்ட உள்ளாட்சி வார்டு உறுப்பினர் இடங்களில் 113 இடங்களின் முன்னிலை நிலவரம் தெரிந்தது. இதில் 66 இடங்களில் தி.மு.க. முன்னிலை பெற்றிருந்தது. அ.தி.மு.க. 47 இடங்களில் முன்னிலை பெற்று 2-வது இடத்தில் இருந்தது. சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு மிக கடுமையான தோல்வியும், பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அமைப்புகளைப் பொருத்தவரை தமிழகத்தில் மொத்தம் 5067 ஒன்றிய உள்ளாட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் உள்ளன. மதியம் 1 மணி நிலவரப்படி 139 இடங்களின் முன்னிலை நிலவரம் தெரிந்தது.

ஒன்றியங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றனர். 80 இடங்களில் அ.தி.மு.க. முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்ட தி.மு.க. 53 இடங்களில்தான் முன்னிலை பெற்றிருந்தது. அ.ம.மு.க. 3, மற்ற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தன.

2 மணி நிலவரப்படி மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி முந்தியது. திமுக வேட்பாளர்கள் 80 இடங்களில் முன்னிலையில் இருந்தனர். அதிமுக வேட்பாளர்கள் 78 இடங்களில் முன்னிலை பெற்றனர். ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களைப் பொருத்தவரை, அதிமுக கூட்டணி 180 இடங்களிலும், திமுக கூட்டணி 182 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *