மெரினாவில் இளைஞர்களுடன் கேக் வெட்டிய காவல் ஆணையர்

சென்னை.ஜனவரி.1

சென்னை மெரினா கடற்கரையில்  மாநகர காவல்துறை ஆணையர் ஏகே.விஸ்வநாதன் கேக் வெட்டி பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடினார். 

2020ஆம் ஆண்டு புத்தாண்டை சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாடினர். இதனால் நேப்பியர் பாலம் முதல் பெசண்ட் நகர் கடற்கரை வரையிலான சாலைகள் மூடப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் மெரினாவில் கூடியிருந்த இளைஞர்கள் உற்சாக வெள்ளத்தில் திளைத்தனர்.  ஒருவொருக்கு ஒருவர் ஹேப்பி நியூ இயர் என்று வாழ்த்துகளை கூறி  மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே சென்னை காவல் துறை ஆணையர் ஏகே.விஸ்வநாதன் கேக் வெட்டி பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *