குரூப்-1 தேர்வுக்கு ஜன-20 முதல் விண்ணப்பிக்கலாம்!!!

சென்னை, ஜனவரி-01

2020-ம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வுக்கு ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து குரூப்-1 பணிகளில் மிக அதிக எண்ணிக்கையிலான 181 காலிப் பணியிடங்களுக்காக, அதிக தேர்வர்கள் பங்கேற்ற முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் முடிவுகளை, அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வெளியிட்டு தேர்வாணையம் சாதனை புரிந்துள்ளது.

அதிகப்படியான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு இத்தேர்வு முடிவுகள் மிக குறுகிய காலத்துக்குள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் 2020-ம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு 2020 ஜனவரி மாதம் வெளியாகும் என்று ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி கூறியிருந்தது. இந்நிலையில், ஜனவரி 20-ம் தேதி முதல் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 19-ம் தேதி கடைசி நாள் என்றும், எழுத்துத் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *