நீர்நிலைகளில் பரவும் பதுமராகத்தை அகற்ற ரூ.7 கோடிக்கு அதிநவீன இயந்திரம் வாங்க கோவை மாநகராட்சி முடிவு

கோவை, ஜனவரி-01

நீர் நிலைகளில் பரவும் பதுமராகத்தை அகற்ற 7 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன சாதனங்கள் வாங்கும் நடவடிக்கைகளில் கோவை மாநகராட்சி இறங்கியுள்ளது

தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சியான கோவையில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏராளமான வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் மற்றோரு சீரிய முயற்சியாக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

நீர்நிலைகளில் சேரும் குப்பைகளால் நீரும், மண்ணின் வளமும் பாதிக்கப்படுகிறது. மேலும், நீர்நிலைகளில் தேவையில்லாமல் வளரும் களை செடிகளால் நீர் சேமிப்பானது குறைகிறது. இதனை தடுத்து, நீர் நிலைகளில் பரவும் பதுமராகத்தை அகற்ற 7 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன சாதனங்கள் வாங்கும் நடவடிக்கைகளில் கோவை மாநகராட்சி இறங்கியுள்ளது

இதேபோன்று, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு, மழைநீர் சேகரித்தல், குப்பைத்தொட்டியில்லாத நகரமாக்குதல், சாலைபாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை தரம்பிரித்தல், இயற்கை உரம், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்டவைகளில் சிறந்துவிளங்கிட ஸ்மார்ட்டா யோசிப்போம், சிறப்பா செயல்படுவோம் என்ற வாசகத்தோடு கோவை மாநகராட்சி சார்பில் டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மாநகராட்சி அதிகாரிகள் தீவிர வேலைப்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சியின் முயற்சிகளும், புதுமையான நடவடிக்கைகளும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *