சென்னையில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னை.ஜனவரி.1

சென்னையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது.

சென்னையில் 2020 புத்தாண்டை வரவேற்கும் விதமாக மெரினா கடற்கரையில் இளைஞர்கள்,பெண்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். நள்ளிரவு 12 மணி அளவில் புத்தாண்டு பிறந்ததும்  வண்ண வண்ண வான வெடிகளை வெடித்தும்,பலூன்களை பறக்கவிட்டும்  உற்சாக முழக்கமிட்டு புத்தாண்டை வரவேற்று ஒருவொருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கு மாநகரகாவல்துறை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்தனர். சென்னை மாநகர் முழுவதும் 15 ஆயிரம் காவலர்கள் இரவு விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு நேற்று இரவு 8 மணியில் இருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மெரினாவில் நேற்று இரவு மக்கள் கூட்டம் அலைமோதியது.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தங்கும் விடுதிகள், பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் ஆடல்-பாடலுடன் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *