ஜம்மு காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்!!!

ரஜோரி, ஜனவரி-01

ஜம்மு-காஷ்மீர் ரஜோரி பகுதியில் பாகிஸ்தானுடனான சண்டையில் 2 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் தற்போது புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி தாக்குதல் நடத்தி உள்ளது. தீவிரவாதிகள் இந்திய எல்லைகளை நோக்கி சிறிய அளவிலான கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

காஷ்மீர் மாநிலம் நவ்சேரா செக்டார் பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து, அங்கு இந்திய ராணுவத்தினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தற்போது அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *