புத்தாண்டு முதல் நாளில் சென்னையில் மழை

சென்னை.ஜனவரி.1

2020 ஆங்கிலப்புத்தாண்டு முதல்நாளான இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பொழிந்தது.

லட்சத்தீவு, அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னையில் இன்று காலை நல்ல மழை பெய்து. அடையாறு,தியாகராயநகர்,சைதாப்பேட்டை, மாதவரம்,  வியாசர்பாடி,கிண்டி, ஆலந்தூர், மடிப்பாக்கம், மேடவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் இன்று காலை பாட்டம் பாட்டமாக மழை  பெய்தது.

 இதேபோல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை  மிதமான மழை பெய்தது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை முடிவடையும் நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை மேலும் 3 நாட்களுக்கு தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *