குடியரசுத் தலைவர், பிரதமர் புத்தாண்டு வாழ்த்து!!!

டெல்லி, ஜனவரி-01

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், “பிறக்கும் புத்தாண்டில், அமைதியான, அக்கறையான, கருணையான சமுதாயத்தை உருவாக்க நாம் உறுதி எடுத்துக் கொள்வோம். வலிமையான, வளமையான இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை புதுப்பிப்பதற்கும் இதுவே தக்க தருணம் ஆகும். இந்த புத்தாண்டு, மக்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வரட்டும்“ என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில், “2019 அற்புதமான ஆண்டாக இருந்தது. மாற்ற முடியாது என்று நினைத்திருந்த விஷயங்களை நாம் மாற்றினோம். சாத்தியம் என்று நினைக்காத பல விஷயங்களை சாதித்து காட்டினோம். அதுபோல், 2020-ம் ஆண்டு, இந்தியாவை மாற்றி அமைக்கவும், 130 கோடி இந்தியர்களுக்கு அதிகாரம் அளிக்கவுமான முயற்சிகளின் தொடர்ச்சியாக அமையும்“ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *