பாதுகாப்பில் அரசியல் தலையீடு இல்லை-பிபின் ராவத் விளக்கம்

டெல்லி, ஜனவரி-01

தமக்கு எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இல்லை என்றும், அரசு கூறுவதையே செயல்படுத்தி வருவதாகவும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் விளக்கமளித்துள்ளார்.

ராணுவப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றும் நேரத்தில், முப்படை தளபதி பதவியை உருவாக்க மத்திய அரசு கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது.  ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து நேற்று (டிச.31) ஓய்வு பெற்ற பிபின் ராவத், முப்படைகளின் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவின் முதல் முப்படை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பிபின் ராவத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;  “ராணுவ நடவடிக்கைகளில் தரைப்படை, கடற்படை, விமானப்படை இணைந்து செயல்படும்.  முப்படைகளில் ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  அரசியல் சார்ந்து செயல்படாமல் மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே செயல்படுகிறோம்” என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *