உலகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்று கோலாகலம்

ஜனவரி. 1

2020 புத்தாண்டை வரவேற்று உலகம் முழுவதும்  அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


புதிய ஆண்டின் தொடக்க நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதன் மூலம் இந்த ஆண்டு வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் நிலவி வருகிறது.

வானவேடிக்கைகள், இசை நிகழ்ச்சிகள், விருந்து கொண்டாட்டங்கள், என பல்வேறு விதங்களில் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். நட்சத்திர விடுதிகள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டங்கள் களைகட்டியது.
கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் இந்த சிறப்பு பிரார்தனைகளில் கலந்து கொண்டு புத்தாண்டை வரவேற்றனர்.

பிரான்ஸ் தலை நகர் பாரிசில் வானவேடிக்கையுடன் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் லட்சகணக்கான மக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

துருக்கி இஸ்தான்புல்லின் பாஸ்பரஸ் ஜலசந்தியில்  புத்தாண்டை வரவேற்கும் விதமாக வண்ணமயமான  வான வேடிக்கை  நடை பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில்  2020 புத்தாண்டை வரவேற்று  கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


ஜப்பானில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டம்

தாய்லாந்து நாட்டில் சாவோ ஃபிராயா ஆற்றின் குறுக்கே புத்தாண்டை வரவேற்று நடைபெற்ற வண்ணமயமான வானவேடிக்கையில் ஏரளமான மக்கள் கலந்து கொண்டனர்

இந்தியாவில் டெல்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தி ஆனந்தமாக கொண்டாடி மகிழ்ந்தனர். கோயில்கள்,தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு  தலங்களிலும் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

வாரணாசியில் புத்தாண்டு பிறந்ததையொட்டி கங்கை நதியில் நடைபெற்ற ஆரத்தி வழிபாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் புத்தாண்டையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

மேலும் மும்பையில் உ ள்ள இந்திய நுழைவாயில் பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்


சென்னை மெரினாவில் திரண்ட இளைஞர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் நள்ளிரவு 12 மணியளவில் புத்தாண்டை வரவேற்று உற்சாக குரல் எழுப்பினர்.

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *